எருமைப்பட்டி: புகையிலை விற்பனை: 20 கடைகளில் சோதனை

எருமைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சுமார் 20 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, 20 பாக்கெட் புகையிலை மற்றும் 13 பாக்கெட் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி