நாமக்கல்: ரூ.5 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் வாரச்சந்தையில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், முசிறி, தொட்டியம், துறையூர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கறிக்கடைகளுக்காக ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்த சந்தையில் மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.

தொடர்புடைய செய்தி