இராசிபுரம் கைலாசநாதா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில், ஐப்பசி பௌர்ணமியையொட்டி புதன்கிழமை (நவ. 5) அன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில், ஸ்ரீ கைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்மனுக்கு மாலை 6 மணி அளவில் அபிஷேகங்கள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, மூலவர் கைலாசநாதர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி