நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கீரம்பூரில், பெங்களூரிலிருந்து கொடைக்கானல் சென்ற சொகுசு பேருந்து அதிகாலை 3 மணியளவில் பைபாஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 15 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.