குமாரபாளையம் புதிய பேருந்து நிலைய பணிகள் நிறைவு பெறாததால், குறுகிய இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பேருந்துகள், மினி பேருந்துகள், நகராட்சி பேருந்துகள், கடைகள், அம்மா உணவகம் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளதால் பயணிகள் வெயிலில் நின்று பேருந்து ஏறுகின்றனர். இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கோடை வெப்பத்தை சமாளிக்க, பேருந்து நிலையம், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர் பாலம் பிரிவு, கவுரி தியேட்டர் ஆகிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் நீர் மோர் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.