மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் அதிரடி ஆய்வு

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாங்கபுரம் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான கிணற்று நீர் கடந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு திடீரென இளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை நம்பி வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த அசாதாரண மாற்றத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கிணற்றை ஆய்வு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி