மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழையால் சுமார் 2000 ஏக்கர் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதமடைந்தது. வெட்டாற்றில் ஆகாய தாமரைகள் படர்ந்ததால் நீர் வடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். சௌமியா அன்புமணி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, டெல்டா மாவட்டங்களில் தூர்வார போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் நெல்மணிகள் முளைத்துவிட்டன என்றும் குற்றம் சாட்டினார்.