மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் பள்ளிக்குச் சென்ற 10 வயது மாணவன் பிரணவ் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, சிறுவன் டிராக்டரில் விழாமல் உயிர் பிழைத்தான். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.