நாகை: சிவலிங்கம் மீது சூரிய ஒளி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் மேல மறைக்காடர் ஆலயத்தில், இன்று காலை 6 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டது. சுமார் பத்து நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்வில், சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை வழிபட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர். சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிவலிங்கத்திற்கு 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இத்தகைய நிகழ்வு நடப்பதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி