பதைப்பதைக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மயிலாடுதுறை ஆரோக்யநாதபுரத்தில், 75 வயது மூதாட்டி சுசிலா ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பும் போது, மர்ம நபர்கள் 12 பவுன் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த 29ஆம் தேதி நடந்துள்ளது. தற்போது வெளியான சிசிடிவி காட்சிகளில், தொப்பி அணிந்த நபர் ஒருவர் மூதாட்டியை தள்ளிவிட்டு, கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து, உடன் வந்த பைக்கில் தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி