இசையால் அனைவரையும் கட்டி போட்ட இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60வது மணிவிழா மாநாடு இன்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக, இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் திரைப்பட பின்னணி இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இன்னிசை கச்சேரி நடத்தினார். 'ஜகம் நீ ஜனனி' பாடலுடன் தொடங்கிய கச்சேரியில், பக்தி பாடல்கள் மற்றும் 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' போன்ற உருக்கமான திரைப்படப் பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி