மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள முடவன் ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பத்து கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த ஆறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதால், விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.