நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் ஊராட்சியில் 50 ஏக்கர் ஏரியில் மண் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.