மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன், பொதுச் செயலாளர் சுகுமாறன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் லாசர், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, நாகை எம்.பி. வை. செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, சின்னத்துரை, மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி