நாகை: திருமாவளவனின் சிற்றன்னையார் மறைவுக்கு காங்கிரஸ் அஞ்சலி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சிற்றன்னையார் மறைவையொட்டி, வேளச்சேரியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.என். அமிர்தராஜா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தனது இரங்கலையும் ஆறுதலையும் அவர் தெரிவித்தார். இந்த அஞ்சலி நிகழ்வில் கே. நவாஸ் கனி எம்பி மற்றும் முன்னாள் எம்பி வரபிரசாத் ராவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி