கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா

நாகை மாவட்டம் வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பௌர்ணமி மற்றும் பரணி பெருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 4) தொடங்கி நவ. 6}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் அன்னாபிஷேகம், முன்னாள் அமைச்சர் இரா. ஜீவானந்தம் தலைமையில் சொற்பொழிவு, இலக்கிய பட்டிமன்றம், சந்திரரேகை, திருவருட்பா அகவல் பாராயணம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன், ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மா. வீரசண்முகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இன்று இரவு நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். நாளை அதிகாலை பஞ்சமூர்த்திகள் ஓலைச்சப்பர வீதியுலா நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி