உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட இளைஞர் நல அதிகாரியான ராம்கிருபால் யாதவ் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு பெண் மற்றும் இளம் ஆண் ஒருவர் ராம்கிருபாலின் உடலை ஒரு ஸ்கூட்டரில் வைத்து கொண்டுவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்கள் அந்த உடலை காலை 6 மணிக்கு உணவகத்தின் முன் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.