கேரளா மலப்புரம் மஞ்சேரியில் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றாந்தந்தைக்கும், உடந்தையாக இருந்த தாய்க்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தலா ரூ.11.75 லட்சம் அபராதம் விதித்து, அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலக்காட்டைச் சேர்ந்த தாயின் 2வது கணவர், 2019-2021-க்கு இடையில் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்தது விசாரணையில் அம்பலமானது.