உத்தர பிரதேசம்: பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அண்மையில் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து நீதி கேட்க சிறுமியின் தாயார் குற்றவாளிகளின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து போலீசில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் 6-7 வயதுடைய மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.