பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 19' சீசன், ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முன்னாள் அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் போட்டியாளராக பங்கேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டைசன் அக்டோபரில் பிக்பாஸ் வீட்டிற்குள் 10 நாட்கள் வரை தங்குவார் என கூறப்படுகிறது.