தொடர்ச்சியான வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க 'மைக்ரோ பிரேக்ஸ்' எடுப்பது பயனுள்ளது என கூறப்படுகிறது. வேலையின் நடுவே 5 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும் இந்த சிறு இடைவேளை, பணியாளர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்த நேரத்தில், இருக்கையை விட்டு எழுந்து நடப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, அல்லது ஒரு நிமிடம் தியானம் செய்வது போன்ற செயல்களை செய்யலாம்.