கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே குடிபோதையில் இருந்த குமார் என்ற பயணி ஓடும் ரயிலில் இருந்து ஸ்ரீகுட்டி என்ற 19 வயது பெண்ணை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் ரயிலில் கழிவறை சென்றுவந்த ஸ்ரீகுட்டியிடம் தகராறு செய்த குமார் அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து மீட்கப்பட்ட ஸ்ரீகுட்டி மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.