உசிலம்பட்டி: கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த முருகேசன்(52) என்ற திமுக பிரமுகரை பிப். 1ம் தேதி பைக்கில் ஏற்றி சென்று மங்கம்மாள்பட்டி சுடுகாடு அருகில் மது வாங்கி கொடுத்து முருகேசன் தலைத் துண்டித்து உடலை, மங்கம்மாள்பட்டி சுடுகாட்டிலும், துண்டிக்கப்பட்ட தலையை டி. கல்லுப்பட்டி பேரையூர் சாலையிலுள்ள ஒயின்ஷாப் அருகில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகர், பென்னி (எ) பார்த்தீபன் (30) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (26), அணைக்கரைப்பட்டி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி(35), மங்கம்மாள்பட்டியைச் சேர்ந்த தர்மதுரை (29) ஆகியோரை நேற்று முன் தினம் (பிப். 3) போலீசார் பிடிக்க முயன்ற போது, கீழே விழுந்து 3 பேரும் கை, கால்கள் முறிந்தது. இதனையடுத்து இவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சையில் சேர்த்தனர். இந்த கொலையில் மேலும் ஒருவரைத் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி