மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு 60 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும், 20 கட்சிகளுக்கு அழைப்பு இல்லை எனவும் கூறினார். டிடிவி தினகரன் ஒருபோதும் அதிமுகவை மீட்கப் போவதில்லை என்றும், அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார் என்றும், தொண்டர்கள் யாரும் டிடிவி தினகரனிடம் அதிமுகவை மீட்டு தாருங்கள் என கேட்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.