மதுரை: மூக்கையா தேவரின் மணி மண்டபத்திற்கு பூமி பூஜை.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு சிலையுடன் கூடிய அரங்கம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (நவ. 4) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், தேனி எம். பி தங்க தமிழ் செல்வன், தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி