சென்னையில் இருந்து இன்று (டிச. 28) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை மதுரை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம். பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், இளைஞரணி செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து காரில் பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்றார்.