மதுரை: தவெக மாநாடு.. கொடிக்கம்பம் சாய்ந்து கார் சேதம்

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி கிராமத்தில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டிற்காக 100 அடி உயர கொடிக்கம்பம் நடும் பணி இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. 

எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் சாய்ந்ததில் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி