வைகை அணையில் விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மதுரை யானைக்கல் தரைப்பாலம் ஒட்டிய வைகை வடகரை சாலையில் வெள்ளநீர் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது.யானைக்கல் தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் நீர் வெளியேற முடியாமல் சாலையோரங்களில் தேங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மாறி மாறி பொறுப்பை சுமத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.