மதுரை திருமங்கலம் எம்எல்ஏவும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் எடப்பாடியார் தன்னை நம்பியவர்களைக் கெடுக்கவில்லை என்றும், அவரை நம்பி கெட்டவர்களுக்குப் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியுள்ளார். "நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு" என்ற இலக்கணத்தின்படி இருபெரும் தலைவர்கள் வாழ்ந்து வரலாறு படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.