தூய்மையற்ற நகரம்; முதலிடம் பிடித்த மதுரை மாநகராட்சி

மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன் 2025 பட்டியலில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்களில் மதுரை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை பாஜக நிர்வாகி ஒருவர், அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் கைகளில் வெற்றி கோப்பைகளுடன் இருக்கும் சுவரொட்டிகளை ஒட்டி, 'நிர்வாக திறமையால் அசுத்தமான நகரமாக முதலிடம் பெற்று தந்த அனைவருக்கும் நன்றி' என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி