மதுரையில் தவெக மாநாட்டில் தற்போது உரை நிகழ்த்திவரும் தவெக தலைவர் விஜய் தங்களது கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளார். நமது கூட்டணி அடிமைக் கூட்டணியாக இருக்காது எனத் தெளிவுபடுத்தினார். 2026இல் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என அனல் பறக்கப் பேசினார்.