மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெளியூர் வர்ணனையாளர்கள் காளை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.