கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்; நீதிமன்றம் தலையிட முடியாது

தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் சார்பில் பொன்குமார் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடக்கக் கல்வியில் தமிழ் கற்பிக்கப்படாது என்றும், 6-ம் வகுப்பிலிருந்து 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. 

மேலும், 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை பாடமாக சேர்க்கவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிடக் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாடத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி முறையிடலாம் என்றும் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி