தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் ஓகாவிலிருந்து புறப்படும் வாராந்திர விரைவு ரயில்கள் (09520) நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதுரையை வந்தடையும். மறுமார்க்கத்தில், மதுரையிலிருந்து நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில் (09519) நவம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஓகாவை சென்றடையும். இந்த ரயில்கள் கொடைக்கானல், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல நிலையங்களில் நின்று செல்லும்.