மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நல சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளியூர் வர்ணனையாளர்கள் காளை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காளைகளைப் பெருமையாகப் பேசுவதாகவும், இதனால் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கொடுக்காத உரிமையாளர்களின் காளைகள் பெயர்கூட வாசிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போட்டிகளின்போது வர்ணனையாளர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும், மதுரை மாவட்ட வர்ணனையாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும், மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.