தெரு நாய்களைப் பிடிக்க புதிய வாகனங்கள்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களையும் போக்குவரத்தையும் அச்சுறுத்தும் தெரு நாய்களைப் பிடிக்க 5 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கரூா் வைஸ்யா வங்கியின் ரூ. 14 லட்சம் பங்களிப்பில் புதிதாக 2 நாய்ப் பிடிக்கும் வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 3 வாகனங்களுடன் சேர்த்து மொத்தம் 5 வாகனங்கள் மூலம் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் நாய்கள் பிடிக்கப்படும். மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் புதிய வாகனங்களின் சேவையை நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி