மதுரையில் பந்தல்குடி கால்வாய் சீரமைப்புப் பணிகள் நடக்கும்போது, அருகே உள்ள குடிநீர் விநியோகக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் கால்வாயில் கலந்து கழிவுநீராக வீணாகிறது. துர்நாற்றம் வீசும் நிலையிலும் மக்கள் குடங்களில் நீரை சேமித்து வருகின்றனர். குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.