மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பிரார்த்தனை செய்தார். தொழுகை முடிந்து வருவோருக்கு மாநாட்டு அழைப்பிதழ்களை இனிப்புடன் வழங்கினார். அப்போது, அவருக்குப் பின்னால் இருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளைஞர் மாநாடு பேனரை, ஆனந்த் வேண்டாம் எனத் தடுத்தும் தவெக தொண்டர் கிழித்த சம்பவம் காண்போரை முகம் சுளிக்க வைத்தது.