மதுரை: சாலையில் ஒடும் வெள்ளநீர்; மூழ்கியபடி செல்லும் வாகனங்கள்

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், மதுரை மாநகரில் வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் யானைக்கல் தரைப்பாலம் ஒட்டிய வைகை வடகரை சாலையில் வெள்ளநீர் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் நனைந்தபடி வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. சிம்மக்கல், ஓபுளாபடித்துறை வழியாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி