2025-2026 ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3,200 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளனர். இந்தப் போட்டிகள் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் திங்கள்கிழமை தொடங்கி, வருகிற 6 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும், முதலிடம் பெறுவோர் மாநிலப் போட்டிக்குத் தேர்வாகுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு தமிழக அரசின் சார்பில் கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும்.