மதுரை அருள்மிகு ஸ்ரீ மதுரவல்லி தாயார் உடனுறை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு ராமாராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடந்தது. இன்று (ஜூன் 13) திருவிழாவின் 12ம் நாள் காலை வியூக சுந்தர்ராஜ பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா", "கோபாலா" என முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.