சோழவந்தான்: பெரியாறு கால்வாயில் மூழ்கிய மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த 80 வயது வீரம்மாள், பெரியாறு கால்வாய் அருகே நடந்து சென்றபோது தடுமாறி தண்ணீரில் விழுந்தார். அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், நேற்று (நவ. 4) காலை வாவிடமருதூர் அருகே உள்ள கால்வாயில் மூதாட்டியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி