ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் உடன் எல்விஎம்-3 ராக்கெட் இன்று (நவ.2) ஏவப்பட்டது. 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கிய நிலையில், மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து 600 கோடி ரூபாயில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. முன்னதாக இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
நன்றி: ANI