மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட பிரதமர், முதல்வர் பதவி பறிப்பு மசோதா கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மசோதா கோப்புகளை கிழித்து எரிந்து காலையில் போராட்டம் நடத்தியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, 2 மணிக்கு அவை தொடங்கி நடைபெற்ற நிலையில், அமளி தொடருவதால், மக்களவை சபாநாயகர் அவை நடவடிக்கைகளை மாலை 5 மணிவரையில் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.