வேப்பனப்பள்ளி அருகே டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் மாலை கே. கொத்தூர் பகுதியை சேர்ந்த பாலப்பா (70) என்பவர் வேப்பனப்பள்ளி நோக்கி நடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி