வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அடுத்த குரங்குக்கல் மேடு பகுதியில் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் சிங்காரப்பேட்டைனர் திருப்பத்தூர் செல்லும் சாலையை சுமார் இரண்டரை வயது கொண்ட புள்ளிமான் ஒன்று நேற்று (செப்.19) கடக்க முயன்றது.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரத்தில் விழுந்து பலியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சிங்கராபேட்டை வனத்துறையினர் இறந்த ஆண் புள்ளி மான் சடலத்தை மீட்டு வனத்துறை அலுவலகத்தில் பிரேத பரிசோதனை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி