ஊத்தங்கரை: இளைஞா் உயிரிழப்பு..போலி டாக்டருக்கு காப்பு

ஊத்தங்கரை அருகே நடுப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த விவசாயி பாபு (27) ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம், சிங்காரப்பேட்டை அருகே எட்டிப்பட்டியில் மெடிக்கல் நடத்தி வரும் மனோஜ் (45) என்பவரிடம் ஊசி போட்டுக்கொண்ட பிறகு, பாபு வீட்டிற்குச் சென்று குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் மனோஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி