கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி அடுத்த காட்டு சிங்கிரிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி செல்வா (25) மற்றும் சந்திரபட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேஷ் (35) ஆகியோர் கடந்த 2-ஆம் தேதி அன்று டூவீலரில் கல்லாவி-ஊத்தங்கரை சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் ராஜேஷ் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.