அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராகிபுல் அலி (23) என்பவர், சூளகிரி அருகேயுள்ள குண்டுகுறுக்கி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக, அவர் தங்கியிருந்த விடுதி அறையின் 3-வது தளத்திலிருந்து குதித்ததில் படுகாயமடைந்த அவர், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.