கிருஷ்ணகிரி: குளியல் அறையில் ரகசிய கேமிரா வைத்த பெண் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான மகளிர் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்வழக்கை காவல்துறையினர் விசாரணை செய்து வருவதால் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி